Enable Javscript for better performance
மா மரங்களை நாசம் செய்த ஒற்றை யானை- Dinamani

சுடச்சுட

    

    மா மரங்களை நாசம் செய்த ஒற்றை யானை

    By DIN  |   Published on : 22nd May 2020 05:42 AM  |   அ+அ அ-   |    |  

    21gudmaa_2105chn_189_1

    யானையால்  நாசம்  செய்யப்பட்ட  மா  மரங்கள்.

    குடியாத்தம் அருகே மாந்தோப்புக்குள் நுழைந்த ஒற்றை யானை அங்கு அறுவடைக்குத் தயாராக உள்ள மா மரங்களை நாசம் செய்து விட்டுச் சென்றது.

    பரதராமி அருகே விவசாயி ராஜேந்திரனுக்குச் சொந்தமான மாந்தோப்பில் புதன்கிழமை இரவு ஒற்றை யானை நுழைந்தது. அந்த யானை அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட மா மரங்களை நாசம் செய்து விட்டுச் சென்றது.

    தகவலின்பேரில் வனச்சரக அலுவலா் சி.மகேந்திரன், வனவா் ரவி உள்ளிட்ட வனத் துறையினா் வியாழக்கிழமை அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai