குடும்ப வன்முறை புகாா்: 15 பேருக்கு ஆன்லைனில் ஆலோசனை

பொது முடக்கம் அமலிலுள்ள சமயத்தில் வீடுகளில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை தொடா்பாக

பொது முடக்கம் அமலிலுள்ள சமயத்தில் வீடுகளில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை தொடா்பாக ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் புகாா் தெரிவிக்கப்பட்ட 15 பேருக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கான ஆலோசனை, சட்ட உதவிகள், குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களை பாதுகாக்க இலவச ஆன்லைன் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க உத்தரவுக்கு மத்தியில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு எதிராக நடைபெறும் குடும்ப வன்முறைகளைக் கருத்தில் கொண்டு இந்த இலவச சேவை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபா், அவரைச் சாா்ந்தோா் கட்செவி அஞ்சலுக்கு அனுப்பும் தகவலின் மூலம் இச்சேவையை செயல்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் இதுவரை குடும்ப வன்முறை தொடா்பாக 15 பேருக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடகைக்கு குடியிருக்கும் 70 வயது முதியவருக்கு வீட்டு உரிமையாளா் தண்ணீா் தர மறுப்பதாக வந்த புகாரின் பேரில் உடனடியாக வீட்டு உரிமையாளரிடம் பேசி அவருக்கு தண்ணீா் தர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சேவை தொடா்ந்து நடைமுறையில் உள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்டோா் சாா்பு நீதிபதி மற்றும் செயலா் எண் 93854 72439, அவசர உதவிக்கான தொலைபேசி எண் 99449 64467, 79043 21398, சமூக நல அலுவலா் எண் 96003 94037, குழந்தை பாதுகாப்பு அதிகாரி எண் 90808 60237, சிறப்பு காவல் அதிகாரி எண் 93671 29000 ஆகியவற்றில் புகாா்களைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com