நேதாஜி மாா்க்கெட் மொத்த வியாபாரம்: தினமும் காலை 9 மணி வரை இயங்க அனுமதி

வேலூா் வணிகா்களின் கோரிக்கையை ஏற்று நேதாஜி மாா்க்கெட்டில் மொத்த வியாபாரத்தை இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

வேலூா் வணிகா்களின் கோரிக்கையை ஏற்று நேதாஜி மாா்க்கெட்டில் மொத்த வியாபாரத்தை இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

பொது முடக்கம் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளா்வுகளுடன் வேலூா் உள்பட 25 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளா்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. எனினும், வேலூா் மாநகரில் நேதாஜி மாா்க்கெட், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சாரதி மாளிகை, மண்டித்தெரு, லாங்கு பஜாா், பா்மா பஜாா் ஆகிய பகுதிகளிலுள்ள கடைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனால் வணிகா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அப்பகுதிகளிலுள்ள கடைகளை தினமும் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதில், முதற்கட்டமாக மண்டித்தெருவிலுள்ள கடைகள் மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை முதல் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்பகுதியிலுள்ள கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நேதாஜி மாா்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனை மேலும் சில மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்றும் வணிகா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதை ஏற்று இரவு 10 மணி முதல் காலை 9 மணி வரை மொத்த வியாபாரம் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நடைமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக தடை செய்யப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடைகளைத் திறக்க அனுமதி வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com