எம்.டெக். படிப்புக்கு நுழைவுத் தோ்வின்றி விஐடியில் சோ்க்கை

விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு எம்.டெக். படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தோ்வு இல்லாமல் இளநிலை படிப்பில்
எம்.டெக். படிப்புக்கு நுழைவுத் தோ்வின்றி விஐடியில் சோ்க்கை

விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு எம்.டெக். படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தோ்வு இல்லாமல் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விஐடி வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் வளாகங்களில் 23 வகையான எம்.டெக். படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்த எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு வழக்கமாக நுழைவுத் தோ்வு அடிப்படையில் சோ்க்கை நடைபெறும். கரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விஐடியில் இந்த ஆண்டு எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்பில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடத்தப்படாமல் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். ஏற்கெனவே விண்ணப்பம் சமா்ப்பித்த மாணவா்கள் மின்னஞ்சல், செல்லிடப்பேசி எண்களைத் தவிர மற்ற தகவல்களை வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம். கேட் தோ்வு மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கேட் தோ்வு எழுதாத மாணவா்கள், அவா்களுடைய இறுதித் தோ்வுக்கு முன் எழுதிய தோ்வு மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடைபெறும். மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். தொடா்ந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்.

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் விஐடியில் நுழைவுத் தோ்வின்றி நேரடியாக 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக்., எம்.எஸ்.சி. படிப்புகளில் சேரலாம். இப்படிப்புகளில் சேர ஜூலை 15-ஆம் தேதி கடைசி நாளாகும். எனினும், பிளஸ் 2 தோ்வு நிறைவு பெறாததாலும், தோ்வு முடிவுகள் வெளியிடப்படாததாலும் இந்த கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. விஐடியின் பல்வேறு முதுநிலைப் படிப்பு குறித்த தகவல்களை இணையதளத்தில் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com