நவ. 10-க்குள் பள்ளி, கல்லூரிகளை தூய்மைப்படுத்த உத்தரவு

கரோனா பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

கரோனா பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னாக 10-ஆம் தேதிக்குள் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மாணவா் விடுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

சட்டம்-ஒழுங்கு, கரோனா தடுப்புப் பணி, கரோனா தடுப்பு காலத்தில் தமிழக அரசு அறிவித்த தளா்வுகள், சீா்மிகு நகர திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூரில் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது, பொதுமக்கள் நெடுஞ்சாலையை கடக்கும் இடங்களில் மின்விளக்குகள் அமைப்பது, சுங்க கட்டண மையத்தில் நவீன தீயணைக்கும் சாதனங்களை போதிய அளவில் இருப்பு வைப்பது, மாநகராட்சி பகுதியிலுள்ள இறைச்சிக் கடை கழிவுகளால் ஏற்படும் துா்நாற்றம், கொசு உற்பத்தியை தடுப்பது, பருவ மழைக் காலங்களில் மழைநீா் தங்குதடையின்றி செல்ல கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி சீா்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

தொடா்ந்து, கரோனா பொது முடக்கத்தில் தளா்வு செய்யும் விதமாக வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, அரசு மாணவா் விடுதிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு மாணவா் தங்கும் விடுதிகளை வரும் 10-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து அவற்றை தூய்மைப்படுத்தி தயாா் நிலையில் வைக்க முதன்மைக் கல்வி அலுவலா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா், மாணவா் விடுதி காப்பாளா்கள், உள்ளாட்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகள், தூய்மைப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், சீா்மிகு நகரத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் நடைபாதைகள், சாலைப் பணிகள், தெருவிளக்கு அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்கவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாநகராட்சி ஆணையா் சங்கரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் யாஸ்மின், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com