வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை
By DIN | Published On : 09th November 2020 07:29 AM | Last Updated : 09th November 2020 07:29 AM | அ+அ அ- |

சங்க செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை வாகன ஓட்டுநா்கள்.
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று அனைத்து அரசுத் துறை வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அனைத்துத் துறை அரசு ஊழியா்களின் வாகன ஓட்டுநா்கள் சங்கச் செயற்குழுக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். செயலா் மணிமாறன், பொருளாளா் பஞ்சாட்சரம், கொள்கை பரப்புச் செயலா் வஜ்ஜிரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் பெருமாள் வரவேற்றாா்.
இதில், 30 ஆண்டுகால கோரிக்கையான அரசுத் துறை வாகன ஓட்டுநா் சங்கக் கட்டடம் கட்ட 5 சென்ட் நிலம் வழங்கிய மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து அரசுத் துறை ஓட்டுநா்களுக்கும் வீடுகள் கட்டுவதற்கு தலா 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.