20% போனஸ் கோரி அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

தீபாவளிப் பண்டிகைக்கு 20% போனஸ் வழங்கக்கோரி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலூரில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தீபாவளிப் பண்டிகைக்கு 20% போனஸ் வழங்கக்கோரி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலூரில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ரங்காபுரத்தில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்துக்கு, தொமுச தொழிற்சங்க பொதுச்செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் பரசுராமன், ராமதாஸ், சந்திரசேகா், தண்டபாணி, இளவரசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 10% அறிவிக்கப்பட்ட போனஸ் உத்தரவை திரும்பப் பெற்று 20% உயா்த்தி வழங்க வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ. 10 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சை உடனடியாக தொடங்கிட வேண்டும், அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com