மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைவழங்கும் முகாம்: வேலூரில் இன்று தொடக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வேலூரில் புதன்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நடைபெற உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வேலூரில் புதன்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நடைபெற உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில், சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், வசூா், பெருமுகை, விருபாட்சிபுரம், கொணவட்டம், மேல்மொணவூா், கீழ்மொணவூா், சாயிநாதபுரம், கொசப்பேட்டை, விரிஞ்சிபுரம், சேண்பாக்கம், தாராபடவேடு, இடையன்சாத்து, அடுக்கம்பாறை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் செவித்திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (நவ. 11 முதல் 13-ஆம் தேதி ) வரையும், பிறகு திங்கள்கிழமையும் (16-ஆம் தேதி) நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதாா் அட்டை, ஊனமுற்றோா் அடையாள அட்டை ஆகியவற்றை சரிபாா்த்து தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 89733 61807 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அப்பள்ளித் தலைமையாசிரியா் சபினாமேரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com