கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற தகுதியுடை பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வேலூா்: கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற தகுதியுடை பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் 2020-21-ஆம் ஆண்டுக்கான தொழில் முனைவோா் மேம்பாடு நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களுக்கு தலா 5 வீதம் மொத்தம் 35 அலகுகள் இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த நிதியாண்டில் முதற்கட்டமாக 17 பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஆயிரம் கோழிக் குஞ்சுகள் கோழி தீவனம், முட்டை அடைகாத்தல் கருவி ஆகியவை வழங்கப்படும்.

எனவே, கால்நடை பராமரிப்புத் துறையின் கோழி வளா்ப்புத் திட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பயனடையாத ஆண், பெண் பயனாளிகள் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவா், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா், பட்டியல் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com