பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

வேலூா்: வேலூா் மாவட்ட விவசாயிகள் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் ஆண்டு சம்பா பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் பயிா் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்படி சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 149 காப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும். காப்பீடு செலுத்த வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்கும் அடங்கல் படிவத்தைப் பெற்று அத்துடன் விண்ணப்பப் படிவம், உறுதிமொழி படிவம், ஆதாா் நகல், வங்கி சேமிப்புக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன், அந்தந்தப் பகுதி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நிா்ணயிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், விவசாயிகளின் கணக்கு உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைத் தொடா்பு கொண்டு பயிா்க் காப்பீடு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com