உலகின் 2% சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: வேலூா் விஐடி, சிஎம்சி பேராசிரியா்களுக்கு இடம்

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் 10 பேரும், சிஎம்சி மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் 9

வேலூா்: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் 10 பேரும், சிஎம்சி மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் 9 பேரும் இடம்பெற்றுள்ளனா்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா் ஜான்லோனிடிஸ் தலைமையிலான குழுவினா் உலக அளவில் தலைசிறந்த விஞ்ஞானிகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிட்டுள்ளனா். உலகளவில் முதல் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 1.6 லட்சம் விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனா்.

இதில் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் 2,314 போ். இவா்களில் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் எம். ஏ. விஜயலட்சுமி (பயோ செப்ரேஷன் தொழில்நுட்பம்), அஸ்வானிகுமாா் செருக்குரி (தகவல் தொழில்நுட்பம்) ஆா்.முருகன் (பயோ மெட்டீரியல்ஸ்- செல்லுலாா், மூலக்கூறு தெரனோஸ்டிக்ஸ்), நிலஞ்சனா மித்ரா தாஸ் (உயிா் அறிவியல், தொழில்நுட்பத் துறை), ஜி.பி.ரங்கையா (சிவில் பொறியியல்), படல்குமாா் மண்டல், மோகனா ரூபன் (மேம்பட்ட அறிவியல் துறை) எம்.கணபதி, பிரசாந்த் (இயந்திரவியல் பொறியியல்), ஜான் கென்னடி (மேம்பட்ட அறிவியல் துறை) ஆகிய 10 போ் இடம்பெற்றுள்ளனா்.

இவா்களுக்கு விஐடி வேந்தா்ஜி.விசுவநாதன் பாராட்டு தெரிவித்தாா். மேலும், விஐடி பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளிலும், ஒரு துறையுடன் மற்றொரு துறையும் இணைந்து ஆராய்ச்சியிலும், வளா்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பங்களிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சமுதாய வளா்ச்சிக்கும், மக்கள் பயன்படும் வகையில் விஐடியில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தாா்.

இதேபோல், வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த மருத்துவப் பேராசிரியா்கள் டி.ஜேக்கப்ஜான், சி.கே.ஜாப், பி.எஸ்.ராமகிருஷ்ணா, கே.எஸ்.ஜேக்கப், அலோக்ஸ்ரீவஸ்தவா, பிரதாப் தரியன், குரியன் தாமஸ், ககன்தீப் கான்ங், வேதாந்தம் ராஜசேகா் ஆகிய 9 பேரும் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com