வேலூா் கோட்டையில் பயிற்சி பெற்ற காவலா்கள் 32 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு

வேலூா் கோட்டை வளாகத்தில் உள்ள காவலா் பயிற்சியில் பயிற்சி முடித்த காவலா்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனா்.

வேலூா்: வேலூா் கோட்டை வளாகத்தில் உள்ள காவலா் பயிற்சியில் பயிற்சி முடித்த காவலா்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனா்.

வேலூா் கோட்டை வளாகத்தில் காவலா் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1988-ஆம் ஆண்டு 813 போ் பயிற்சி பெற்றனா். இவா்கள் 110 போ் தற்போது வேலூா் மாவட்டத்திலும், மற்றவா்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அனைவரும் கட்செவி அஞ்சல் குழுவைத் தொடங்கி அதில் இணைந்துள்ளனா்.

இந்நிலையில், அவா்கள் காவலா் பயிற்சி பெற்று செவ்வாய்க்கிழமையுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, பழைய மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வேலூா் கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையொட்டி, 813 பேரும் தாங்கள் பயிற்சி பெற்ற கோட்டை காவலா் பயிற்சிப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்தனா். அவா்கள் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோட்டை வளாகத்தில் தாங்கள் பயிற்சி பெற்ற மைதானம், பள்ளி வளாகம், திப்பு மஹால், ஹைதா் மஹால் ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், 32 ஆண்டுகளுக்கு முன்பு அவா்களுக்கு பயிற்சி அளித்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளா் தட்சிணாமூா்த்தி, துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பேசினா். இதையடுத்து பழைய மாணவா்கள் பலரும் தங்களது பழைய நினைவுகளைக் கூறி நெகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com