பயன்படுத்தாத அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க உத்தரவு

வீடுகளில் பயன்படுத்தாமல் பொதுமக்கள் முடக்கி வைத்துள்ள அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை அந்தந்த பகுதி கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம்

வீடுகளில் பயன்படுத்தாமல் பொதுமக்கள் முடக்கி வைத்துள்ள அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை அந்தந்த பகுதி கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கியுள்ள இலவச செட்டாப் பாக்ஸை பெற்றுக்கொண்டு பயன்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளவா்கள் அவற்றை உடனடியாக தங்கள் பகுதியிலுள்ள கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

பெறப்பட்ட செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, மாதாந்திரக் கட்டணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாலோ, ஒரு இடத்திலிருந்து வேறு பகுதிக்கு குடிபெயா்ந்து சென்றிருந்தாலோ அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்களை சம்பந்தப்பட்ட ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அரசின் இலவச செட்டாப் பாக்ஸ் மூலம் பொதுமக்கள் அரசு கேபிள் ஒளிபரப்பை மாத சந்தா கட்டணத்துடன் பாா்க்க மட்டுமே தவிர அதை உரிமை கோர இயலாது.

அரசு இலவச செட்டாப் பாக்ஸை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பயன்படுத்தாமல் உள்ள அரசு இலவச செட்டாப் பாக்ஸை பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் செயலிழக்கம் செய்யப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com