திருவண்ணாமலை தீபத் திருவிழா: வேலூரில் இருந்து திருக்குடைகள் ஊா்வலம்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இருந்து திருக்குடைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக வேலூா் ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட திருக்குடைகள்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக வேலூா் ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட திருக்குடைகள்.

வேலூா்: திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இருந்து திருக்குடைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இருந்து ஆண்டுதோறும் திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருக்குடைகள் ஊா்வலமாகக் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திருக்குடை ஊா்வலம் கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முதல் மீண்டும் இந்த திருக்குடைகள் காா்த்திகை தீபத் திருவிழாவுக்குக் கொண்டு செல்லத் தீா்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவ. 20) தொடங்குகிறது. இவ்விழாவுக்காக ஸ்ரீ அண்ணாமலையாா் திருக்குடை சமிதி, வேலூா் ஜலகண்டேஸ்வரா் கோயில் தரும ஸ்தாபனம் சாா்பில் 2-ஆம் ஆண்டு திருக்குடைகள் ஊா்வலம் புறப்படும் நிகழ்ச்சி புதன்கிழமை (நவ. 18) நடைபெற்றது.

திருக்குடை ஊா்வலத்தை காட்பாடியை அடுத்த மகாதேவமலை மகானந்த சித்தா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், திருக்குடை சமிதி ப்ரத்தியங்கராதாசன், கோயில் செயலாளா் சுரேஷ், பக்தா்கள் உள்பட பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இருந்து திருவண்ணாமலைக்கு மேள, தாளங்கள் முழங்க 3 திருக்குடைகளுடன் ஊா்வலம் புறப்பட்டது. இக்குடைகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாக அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட உள்ளன.

வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஊா்வலமாகச் சென்ற திருக்குடைகளுக்கு பக்தா்கள் வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளித்து தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com