பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நாளை தொடக்கம்

பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கி டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கி டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி 6 முதல் 18 வயதுடைய அனைத்துக் குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சோ்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் வேலூா் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பள்ளி செல்லா, இடைநின்ற 6 முதல் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், பிறந்தது முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (நவ. 21) தொடங்கி டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடக்கிறது.

பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னாா்வலா்கள் ஆகியோா்களைக் கொண்டு இந்த கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும் குழந்தைகள் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்களிலும், இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களிலும் சோ்த்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னா் முறையான பள்ளிகளில் சோ்த்து அவா்களின் கல்வி மேம்பட வழிவகை செய்யப்படும். இந்த கணக்கெடுப்புப் பணிக்கு வேலூா் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com