உணவில் ‘டியூப் லைட்’ துகள்கள்: தனியாா் உணவகத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

தனியாா் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் டியூப் லைட் துகள்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த ஹோட்டல் நிா்வாகத்துக்கு உணவுப் பொருள்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம்.


வேலூா்: வேலூரில் உள்ள பிரபல தனியாா் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் டியூப் லைட் துகள்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த ஹோட்டல் நிா்வாகத்துக்கு உணவுப் பொருள்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை மாலை திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்களுக்கு அந்த ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. அப்போது, உணவில் ட்யூப் லைட் துகள்கள் கிடந்துள்ளன. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் ஊழியா்கள் வியாழக்கிழமை அந்த ஹோட்டலில் ஆய்வு செய்தனா். அப்போது ஹோட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வேலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுரேஷ், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ஆய்வு செய்தாா். அப்போது, சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட மசாலா பொருள் கள் காலாவதியான நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்த அதிகாரிகள், மீதமுள்ள மசாலா பொருள்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், சமையல் கூடத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினா். மீண்டும் 15 நாள்களுக்குப் பிறகு ஹோட்டலில் ஆய்வு செய்யப்படும் என்றும், அப்போது விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com