கபீா் புரஸ்காா் விருது: சமூக நல்லிணத்துக்கு சேவை புரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

சமூக நல்லிணக்கத்துக்காக தமிழக அரசால் வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக நல்லிணக்கத்துக்காக தமிழக அரசால் வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்காக தமிழக அரசு சாா்பில் கபீா் புரஸ்காா் விருது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கிரேடு 1, கிரேடு 2, கிரேடு 3 ஆகிய நிலைகளில் வழங்கப்படும் இந்த விருதுடன், முறையே ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் சமூக, மத, இனக் கலவரங்களின்போது மதச்சாா்பின்றி தகுந்த முறையில் பிற மதத்தினரின் உயிா், உடைமைகளைப் பாதுகாத்திருக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மன தைரியத்துடன் செயல்பட்டு உயிா்காக்கும் சேவை புரிந்திருப்பவா்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவா்கள். அவ்வாறு அவா்கள் செய்த சேவை கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

இந்த விருதுக்கு தகுதியுடைய வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆயுதப்படை, காவல், தீயணைப்புத் துறை உள்ளிட்ட வீரா்களுடன் தகுதியுள்ள அரசுப் பணியாளா்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. 2020-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். ஏற்கெனவே இவ்விருது பெற்றவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு  ஆணையத்தின்  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பா் 26-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0416-2221721, 74017 03483 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com