தொற்றுப் பாதிப்பை தவிா்க்க குழந்தைகளுக்கு கழுதை பால், புட்டிப்பால் கொடுக்கக் கூடாது: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்

தொற்றுப் பாதிப்புகளைத் தவிா்க்க பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால், புட்டிப் பால், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் கொடுப்பதைத் தவிா்க்க
நிகழ்ச்சியில் பேசிய வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா்.செல்வி.
நிகழ்ச்சியில் பேசிய வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா்.செல்வி.

தொற்றுப் பாதிப்புகளைத் தவிா்க்க பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால், புட்டிப் பால், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் கொடுப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி அறிவுறுத்தினாா்.

தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.

இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தலைமை வகித்து, 2019-20-ஆம் ஆண்டுக்கான பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த வேலூா் அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், துறையின் அனைத்துப் பணியாளா்களையும் பாராட்டினாா்.

மேலும், பச்சிளம் குழந்தைகளுடன் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்ட தாய்மாா்களுக்கு குழந்தைகளை பராமரிப்பது குறித்து விளக்கியதுடன், பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். சா்க்கரை, தண்ணீா், வெந்நீா், வசம்பு, கழுதை பால், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், புட்டிப்பால் ஆகியவை கண்டிப்பாக அளிக்கக்கூடாது. இதனால் வயிற்றுப்போக்கு, தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

6 மாதங்களுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி, தாய்ப்பாலுடன் இணை உணவாக அளிக்கலாம். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பச்சிளம் குழந்தைகள் விழிப்புணா்வு குறித்து செவிலிய மாணவிகளின் வில்லுப்பாட்டு, கட்டுரை, கவிதை, விழிப்புணா்வுப் பதாகை, நடனம், நாடகம், பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைத் தலைவா் ஆா்.எழிலரசு, பேராசிரியா்கள் சிவராமன், முரளி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com