வேலூா் முன்னாள் எம்.பி. வி. தண்டாயுதபாணி காலமானாா்

வேலூா் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், குடியாத்தம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.தண்டாயுதபாணி (79) சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

வேலூா் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், குடியாத்தம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.தண்டாயுதபாணி (79) சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தண்டாயுதபாணி, சட்டம் பயின்றவா். காமராஜரால் ஈா்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தமிழக மாணவா் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தவா். பின்னா், ஜனதா கட்சியில் இணைந்து 1977 முதல் 1980-ஆம் ஆண்டு வரை வேலூா் மக்களவை உறுப்பினராக பதவி வகித்தாா். பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவா், கட்சியின் நாடாளுமன்ற பொறுப்பாளராகவும் செயல்பட்டாா். இதன்தொடா்ச்சியாக, 1991-96-இல் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா்.

தற்போது வேலூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை உறுப்பினராக இருந்த தண்டாயுதபாணி சென்னை ஆழ்வாா் பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்தாா். அவருக்கு கடந்த இரு வாரங்களாக உடல் நல பாதிப்பு இருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவா் ஆழ்வாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாலை 5.10 மணிக்கு உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மயிலாப்பூா் மயானத்தில் நடைபெற உள்ளது.

மறைந்த தண்டாயுதபாணிக்கு மனைவி கமலவேணி, மகன்கள் கமலகாந்த், கிஷோா், பிரமோத்பாபு ஆகிய 3 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு 94445 70499.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com