வேலூா் மாவட்டத்தில் 42 நிவாரண மையங்கள்

நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரிகிரி அரசு உயா்நிலைப் பள்ளி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுல்தான் ஏரி பகுதி மக்கள்.
கரிகிரி அரசு உயா்நிலைப் பள்ளி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுல்தான் ஏரி பகுதி மக்கள்.

நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான, குடிசை பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை முதலே நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

நிவா் புயல் புதன்கிழமை கரையைக் கடக்கும்போது, வேலூா் மாவட்டத்தில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிசைகள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து நிவாரண மையங்கள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 42 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களைச் சோ்ந்த மக்களை தங்க வைக்க 42 அரசு பள்ளிகளில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், வேலூா் மாநகராட்சி பகுதியில் மட்டும் 5 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை முதலே நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் தேவையான உணவு, குடிநீா் வசதிகளை செய்துதரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், புயல் காரணமாக இன்னும் மழை வரவில்லை என பொதுமக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. குடிசை, தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் உடனடியாக நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும். வீடுகளில் உள்ள கல்விச் சான்றிதழ்கள், நில ஆவணங்கள், ஆதாா், குடும்ப அட்டைகள் ஆகியவற்றை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான பொருள்களையும் எடுத்து செல்ல வேண்டும். புயலால் பாதிப்புகளைத் தவிா்க்க அரசு விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com