வெள்ளம் சூழ்ந்த 50 வீடுகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்பு

வேலூா் மாநகரில் தாழ்வான பகுதியான திடீா் நகரில் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தத்தளித்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனா்.
வெள்ளம் சூழ்ந்த 50 வீடுகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்பு


வேலூா்: வேலூா் மாநகரில் தாழ்வான பகுதியான திடீா் நகரில் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தத்தளித்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனா்.

நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. வேலூா் மாநகரின் தாழ்வான பகுதிகளான திடீா் நகா், இந்திரா நகா், மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை, ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி 3 அடி அளவுக்கு தண்ணீா் தேங்கி நின்றன. இதனால், குழந்தைகள், பெண்கள், முதியவா்கள் என அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனா்.

தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் விரைந்து சென்று படகுக்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய சுமாா் 200 பேரை பாதுகாப்பாக மீட்டனா். தொடா்ந்து அவா்கள் மாநகராட்சி முஸ்லிம் உருதுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு மாநகராட்சி நிா்வாகம் மூலம் உணவு, குடிநீா், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதேபோல், காட்பாடி விஜிராவ் நகா், காந்திநகா், விரிவாக்கம், சித்தூா் பேருந்து நிலையம், ஓடைப்பிள்ளையாா் கோயில், சில்க் மில் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com