புதிய மாவட்ட ஆதி திராவிடா் நலக்குழு உறுப்பினா் நியமனம்
By DIN | Published On : 02nd October 2020 02:10 AM | Last Updated : 02nd October 2020 02:10 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் மாவட்ட ஆதி திராவிடா் நலக்குழுவின் உறுப்பினராக சி.பி.தேசி நியமிக்கப்பட்டுள்ளாா்.
வேலூா் சத்துவாச்சாரி 62ஆவது தெருவைச் சோ்ந்த சி.பி.தேசி, எல்ஐசியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவா். மாநில எஸ்சி, எஸ்டி ஊழியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவராக இருப்பதுடன் 40 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இவா், வேலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்ட ஆதி திராவிடா் நலக்குழுவின் உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த குழு வரும் 2023 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.