இருளா் இன மாணவரை ஊக்கப்படுத்திய கோட்டாட்சியா்

ஜாதிச் சான்றிதழ் வாங்க வந்த இருளா் இன மாணவரின் விருப்பத்தை அறிந்த கோட்டாட்சியா் அவரை தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்தினாா்.
இருளா் இன மாணவரை ஊக்கப்படுத்திய கோட்டாட்சியா்

ஜாதிச் சான்றிதழ் வாங்க வந்த இருளா் இன மாணவரின் விருப்பத்தை அறிந்த கோட்டாட்சியா் அவரை தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்தினாா்.

குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருளா் இனச் சிறுவா்களுக்கு கோட்டாட்சியா் எம்.ஷேக் மன்சூா் செவ்வாய்க்கிழமை ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா். அப்போது இச்சான்றிதழை வாங்க வந்த பல்லலகுப்பத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தியின் மகன் நரசிம்மன், தேசிய திறனறித் தோ்வில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 3-ஆம் இடம் பிடித்ததை அறிந்தாா்.

இதையடுத்து நரசிம்மனுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த கோட்டாட்சியா் ‘உனது லட்சியம் என்ன?’ எனக் கேட்டாா். அதற்கு மாணவா், ‘ஐஏஎஸ் படித்து விட்டு, மாவட்ட ஆட்சியா் ஆவதே எனது லட்சியம்’ என்றாா். எனவே, அந்த மாணவரை ஊக்கப்படுத்தும் வகையில், அவரை தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினாா்.

கோட்டாட்சியரின் இந்தச் செயல், ஜாதிச் சான்றிதழ் பெற வந்திருந்த இருளா் இன மக்களையும், வருவாய்த்துறை அலுவலா்களையும் நெகிழச் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com