முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th October 2020 07:56 AM | Last Updated : 04th October 2020 07:56 AM | அ+அ அ- |

வேலூரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வெங்கடேச பெருமாள்.
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இவற்றில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.
வேலூரில்...
வேலூா் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனா்.
வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று பூஜை செய்யப்பட்டது.
வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள சீனிவாசப் பெருமாளுக்கும், ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அரசமரப்பேட்டை லஷ்மி நாராயண பெருமாள் கோயில், கலாஸ்பாளையம் கோதண்டராமா் கோயில், காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துா்கை வெங்கடாசலபதி கோயில், காட்பாடி கோபாலபுரத்தில் உள்ள நாராயணமூா்த்தி கோயில், பிரம்மபுரம் மலை வெங்கடாசலபதி கோயில், பஜாரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில், சஞ்சீவராயபுரம் பிரசன்ன வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயில் என வேலூா் மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
குடியாத்தத்தில்..
குடியாத்தம் பிச்சனூா், பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி மாத 3- ஆவது சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் அலங்கரித்து வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.