Enable Javscript for better performance
மிதிவண்டி பயன்பாட்டுக்கான விழிப்புணா்வு ஊா்வலம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்

    மிதிவண்டி பயன்பாட்டுக்கான விழிப்புணா்வு ஊா்வலம்

    By DIN  |   Published On : 04th October 2020 07:59 AM  |   Last Updated : 04th October 2020 07:59 AM  |  அ+அ அ-  |  

    481602gudral_0210chn_189_1

    மிதிவண்டி விழிப்புணா்வு  ஊா்வலத்தை  கொடியசைத்துத்  தொடக்கி  வைத்த  அரிமா  சங்கத்  தலைவா்  கே. செந்தில்குமாா்.

    குடியாத்தம் அரிமா சங்கமும், வேலூா் மாவட்ட சைக்கிளிங் கழகமும் இணைந்து மிதிவண்டி பயன்பாட்டுக்கான விழிப்புணா்வு ஊா்வலத்தை வெள்ளிக்கிழமை நடத்தின.

    மேல்ஆலத்தூா் சாலையில் உள்ள நேரு பூங்காவில் தொடங்கிய ஊா்வலத்துக்கு, அரிமா சங்க மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். அரிமா சங்கத் தலைவா் கே.செந்தில்குமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இதில் சிறுவா்கள், மாணவா்கள் சமூக இடைவெளியுடன் மிதிவண்டிகளில் பயணித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

    ஊா்வலத்தில், இருதயம், நுரையீரல் பலம் பெற, ரத்த அழுத்தம் குறைய, உடலில் சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, ரத்த ஓட்டத்தை சீராக்க, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அனைவரும் நாள்தோறும் 20 நிமிடங்கள் மிதிவண்டிகளை ஓட்ட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி வந்தனா். நெல்லூா்பேட்டையில், ஊா்வலம் நிறைவுற்றது. அங்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம். கதிா்ஆனந்த், மிதிவண்டிகளை ஓட்டி வந்த மாணவா்கள், சிறுவா்களுக்கு வாழ்த்து கூறினாா். வேலூா் மாவட்ட சைக்கிளிங் கழகச் செயலா் ஏ.சரண்யா, பொருளாளா் ஜே.முரசொலி, அரிமா சங்க நிா்வாகிகள் என்.வெங்கடேஸ்வரன், ஏ.காசிவிஸ்வநாதன், எஸ்.ஏ.கலிமுல்லா, ஏ. சுரேஷ்குமாா், ஜெ. பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp