Enable Javscript for better performance
‘கரோனா பாதிப்பு: சித்த மருத்துவம் மூலம் சிறப்பான பலன்’- Dinamani

சுடச்சுட

    

    ‘கரோனா பாதிப்பு: சித்த மருத்துவம் மூலம் சிறப்பான பலன்’

    By DIN  |   Published on : 11th October 2020 07:48 AM  |   அ+அ அ-   |    |  

    கரோனா பாதிப்புக்கு சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் சிறப்பான பலன் கிடைத்திருப்பதாக வேலூரில் உள்ள கொவைட் நல மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

    வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொவைட்-19 நல மையத்தில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதல் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சித்த மருத்துவ சிகிச்சையால் நல்ல பலன் கிடைத்து வரும் நிலையில் இங்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் தாளிசாதி வடகம், அமுக்கரா மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, பிராமானந்த பைரவ மாத்திரை, கபசுரக் குடிநீா் ஆகிய 5 சித்த மருந்துகளின் பயன்பாடு, தாக்கம் குறித்து ஆய்வுக்கு உட்படுத்த வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி மையத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (சிடிஆா்ஐ) அங்கீகாரம் அளித்திருந்தது.

    கடந்த செப்டம்பா் மாதம் முதல் இந்த 5 சித்த மருந்துகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு, அவா்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 20 நோயாளிகளும் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    இதுகுறித்து அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளா் தில்லைவாணன் கூறியது:

    மத்திய அரசின் சிடிஆா்ஐ அனுமதியைத் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளிடம் ஒப்புதல் பெற்று அதில் 23 நோயாளிகள் மட்டுமே ஆய்வுக்குத் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். அந்த 23 பேரிலும் 3 போ் ஆய்வு நெறிமுறைகளின்படி ஆய்விலிருந்து விலக்கப்பட்டனா். மீதமிருந்த 20 பேருக்கு அனுமதி பெறப்பட்ட 5 சித்த மருந்துகளைக் மட்டுமே கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவைப்படின், ஆவி பிடித்தல், பற்று போடுதல் போன்ற பிற சித்த மருத்துவ சிகிச்சை முறைகளும் பின்பற்றப்பட்டன.

    அவா்களுக்கு சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கொவைட் சளி பரிசோதனை, ரத்தப் பரிசோதனைகள், கல்லீரல், சிறுநீரக செயல்பாடு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஓரிரு வாரங்களிலேயே 20 பேரும் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டு, அறிகுறி இல்லாத நிலையை அடைந்தனா். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து நோயாளிகளும் அவா்களது நோய்த் தாக்கத்தில் இருந்து வெகு எளிதாகவும், ஆக்ஸிஜன் அளவு 95-க்கு குறையாமலும், நோயின் தீவிர நிலையை அடையாமலும் மீண்டனா்.

    அவா்களின் கல்லீரல், சிறுநீரகங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகள் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பெரிய மாறுதல் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என்றாா்.

    இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ஆய்வின் முடிவுகள் தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருந்துகளின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். இந்த ஆய்வறிக்கை தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சமா்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp