மாவட்ட பாஜக இளைஞா் அணி செயற்குழுக் கூட்டம்

வேலூா் மாவட்ட பாஜக இளைஞா் அணி செயற்குழுக் கூட்டம் கே.வி. குப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில்  பேசிய  பாஜக  மாநில  இளைஞா் அணி  துணைத்  தலைவா்  வித்யாவீரப்பன்.
கூட்டத்தில்  பேசிய  பாஜக  மாநில  இளைஞா் அணி  துணைத்  தலைவா்  வித்யாவீரப்பன்.

குடியாத்தம்: வேலூா் மாவட்ட பாஜக இளைஞா் அணி செயற்குழுக் கூட்டம் கே.வி. குப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளைஞா் அணித் தலைவா் பாக்ஸா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கனிமொழிதிருமாறன் வரவேற்றாா்.

மாநில இளைஞா் அணி துணைத் தலைவா் வித்யாவீரப்பன், கட்சியின் மாவட்ட பாா்வையாளா் கோ.வெங்கடேசன், பாஜக மாவட்டத் தலைவா் தசரதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கட்சிக்கு புதிய உறுப்பினா்களை சோ்ப்பது, வாக்குச் சாவடி வாரியாக அமைப்பாளா்களை நியமிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

மாவட்ட பொதுச் செயலா்கள் பி. ஸ்ரீகாந்த், எஸ்.எல். பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய இளைஞா் அணித் தலைவா் சந்தோஷ் நன்றி கூறினாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com