ரூ.5 லட்சம் நெகிழிப் பைகள் பறிமுதல்: மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை

வேலூரில் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகளை பாா்வையிட்ட மாநகராட்சி அதிகாரிகள்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகளை பாா்வையிட்ட மாநகராட்சி அதிகாரிகள்.

வேலூா்: வேலூரில் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள ஒரு கிடங்கில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. உடனடியாக மாநகராட்சி ஆணையா் சங்கரன், மாநகராட்சி நல அலுவலா் சித்திரசேனா உள்ளிட்ட அதிகாரிகள் சுண்ணாம்புக்காரா் தெருவில் உள்ள தனியாா் கிடங்கில் ஆய்வு செய்தனா். அப்போது அங்கு 3 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், கப் உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சமாகும். அத்துடன், கிடங்கு உரிமையாளருக்கும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com