'2021 மார்ச் முதல் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானச் சேவை'

வேலூர் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூர் ஆகிய இரு மார்க்கங்களில் விமானங்கள் இயக்கப்படும் 
'2021 மார்ச் முதல் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானச் சேவை'

வேலூர் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூர் ஆகிய இரு மார்க்கங்களில் விமானங்கள் இயக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் வேலூர் அப்துல்லாபுரத்திலுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விமான நிலையத்தில் 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதே சமயம், விமான நிலையத்தின் ஓடுதளத்துக்கும், டெர்மினல் கட்டடத்துக்கும் இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான அப்துல்லாபுரம்-ஆலங்காயம் சாலையில் 775 மீட்டர் பகுதியை விமான நிலையத்துக்கு ஒப்படைப்பதில் நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விமான நிலையத்தையொட்டி ரூ.1.65 கோடி மதிப்பில் போக்குவரத்து சாலை அமைக்கும் பணி கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த பணிகள் முடிக்கப்பட்டவுடன், விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு தேவையான நெடுஞ்சாலையின் ஒருபகுதி ஒப்படைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், வேலூர் விமான நிலைய விரிவாக்கப்பணிஸ மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள், விமான ஓடுபாதை பணிகள், சுற்று வட்ட சாலைகள், பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், இந்திய விமான நிலைய ஆணை குழும பொதுமேலாளர் எஸ்.வினாயகமூர்த்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: வேலூர் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 2021 மார்ச் மாதத்துக்குள் முடித்து விமானச் சேவை தொடங்கிட ஆயத்தப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக மாநில நெடுஞ்சாலை மாற்றுப்பாதை, விமான நிலைய ஓடுபாதை பணிகள், சுற்று வட்ட சாலைகள், பயணிகள் முன்பதிவு மையம், அடிப்படை வசதிகள் செய்யும் பணி நடைபெறுகிறது. டவர் கன்டரோல் அறைகளும் தயார் நிலையில் உள்ளது. விரிக்கப்பணிகளு க்கு அரசு சார்பில் 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. தனியாரிடம் 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு 2021 மார்ச் முதல் முதற்கட்டமான வேலூரில் இருந்து சென்னை மார்க்கமாகவும், வேலூரில் இருந்து பெங்களூரு மார்க்கமாகவும் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளது. மருத்துவ சேவைக்காகவும், சுற்றுலா, தோல் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகவும் வேலூர் திகழ்வதால் பொதுமக்களின் வசதிக்காக விமான சேவையை மற்ற நகரங்களுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விரிவாக்க பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் இயங்கும்போது சுமார் 200 பேர் சுழற்சி முறையில் நேரடியாகவும், 2 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர் என்றார். அப்போது, ஆவின் தலைவர் த.வேலழகன், விமான நிலைய பொறுப்பு அலுவலர் துரைமேகநாதன், நெடுஞ்சாலை கோட்ட உதவி செயற்பொறியாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com