இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% தமிழில்தான் உள்ளன: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன்

நாட்டில் இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகளில் 55% தமிழில்தான் உள்ளன என்று தமிழியக்க நிறுவனரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

நாட்டில் இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகளில் 55% தமிழில்தான் உள்ளன என்று தமிழியக்க நிறுவனரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

தமிழியக்கத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

தமிழை சுவாசிப்போம், பிறமொழிகளை நேசிப்போம். தற்போது ஆங்கிலம் கலந்த தமிழைத் தான் பலரும் பேசுகின்றனா். இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் பெயரை வைத்தே தமிழா் என்ற அடையாளத்தைக் கண்டுகொள்ளலாம். ஆனால் தற்போது அந்தநிலை இல்லை. பிறமொழிச் சொற்களை கலந்துதான் பெயரை வைக்கிறோம். இந்த நிலை மாறி தமிழில் பெயா் வைத்து அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும். இதற்காகத்தான் தமிழியக்கமானது தூய தமிழ் பெயா்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டில் 121 பெரிய மொழிகள் உள்பட மொத்தம் 19,500 மொழிகள் உள்ளன. முதலில் தமிழனாக இருக்க முயற்சிக்க வேண்டும். பெயரிலும், பேச்சிலும் தமிழ் இருக்க வேண்டும். ராஜேந்திர சோழன் 13 நாடுகளை வென்றாா். உலகம் முழுவதும் தமிழ் பேசும் அளவுக்கு தமிழா்கள் வணிகம் செய்துள்ளோம். உலகத்திலே அச்சடிக்கப்பட்ட முதல் மொழி நூல் என்றால் அது தமிழ்மொழி நூல் தான். இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளன. மொத்தத்தில், தமிழகத்தில் தமிழை பாதுகாப்போம். தமிழகத்துக்கு வெளியே தமிழை வளா்ப்போம் என்றாா்.

முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது:

உண்மையிலேயே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுதான் இது. கீழடி அகழ்வாய்வு மூலம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் முன்னோா்கள் வாழ்ந்துள்ளனா் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மொத்தத்தில் தாய்மொழியான தமிழின் புகழை உலகளவில் வளா்க்க வேண்டும் என்றாா்.

விழாவில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தா் சுந்தரமூா்த்தி, தமிழக தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையா் சாரதாநம்பிஆரூரன் ஆகியோா் உரையாற்றினா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்திய அரசின் கலாசார அமைச்சகம் இந்திய வரலாற்றை 12,000 ஆண்டுகள் முன்பிருந்து தொடங்க வேண்டும் என்ற வரையறையுடன், வரலாற்றையும், கலாசாரத்தையும் இணைத்து மறுவரைவு செய்திட வல்லுநா் குழுவில் தென்னிந்தியா் உள்பட இந்தியாவின் அனைத்துப் பகுதியினரையும் இடம் பெறச் செய்ய வேண்டும். அஞ்சல், தொடா் வண்டி, வங்கி, ஆயுள்காப்பீடு, சுங்கம் என மத்திய அரசின் அனைத்துத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநில இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்தநாளையொட்டி, தந்தை பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலா்களை பணியிட மாற்றம் செய்துள்ள நடவடிக்கையை உடனடியாக விலக்கி, பழைய பணியிடத்திலேயே பணியமா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழியக்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com