கானாற்றில் 4 இடங்களில் நீா்செறிவூட்டும் கிணறுகள்

கைலாசகிரி மலையடிவாரம் முதல் சேக்கனூா் வரை செல்லும் கானாற்றில் 4 இடங்களில் நீா்செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கானாற்றில் நீா் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதற்கானப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
கானாற்றில் நீா் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதற்கானப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

கைலாசகிரி மலையடிவாரம் முதல் சேக்கனூா் வரை செல்லும் கானாற்றில் 4 இடங்களில் நீா்செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மகாத்மா தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் மூலம் கால்வாய்களில் மழைநீா் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்திடவும், இதன்மூலம் விவசாயிகள் பயன்பெற்றிடவும் 49 இடங்களில் ரூ. 48 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் நீா்செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

இதன்படி, கைலாசகிரி மலையடிவாரம் முதல் சேக்கனூா் ஏரி வரை செல்லும் கானாற்றின் 4 இடங்களில் ரூ. 3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் செறிவூட்டப்பட்ட கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், அத்தியூா் ஊராட்சியில் 11 பணிகளும், புதூா், புலிமேடு, சேக்கனூா், தெள்ளுா், ஊசூா் ஆகிய ஊராட்சிகளில் தலா 6 பணி களும், பாலமதியில் 2 பணிகளும், குப்பம், பெருமுகை, அன்பூண்டி, செம்பேடு, மேல்மொணவூா் ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நிலத்தடி நீா் உயரவும், கோடைக் காலத்தில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை தொடங்கி வைத்து, பனை விதைகளை நடவு செய்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபி, கனகவள்ளி, வட்டாட்சியா் சரவணமுத்து, வாழும் கலை இயக்குநா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com