நீட் தோ்வு இடஒதுக்கீட்டில் மத்திய அரசின் முகவராக ஆளுநா் செயல்படுகிறாா்

நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநா் மத்திய அரசின் முகவராக

நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநா் மத்திய அரசின் முகவராக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் குற்றம் சாட்டினாா்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.லதா தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினாா்.

இதில், வேலூா் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலாம்பட்டு, பீஞ்சமந்தை, ஜாா்தான்கொல்லை ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த மக்களுக்கு நிலப்பட்டா, நூறு நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா் எம்.பி. சுப்பராயன் செய்தியாளா்களிடம் கூறியது:

மழைவாழ் மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்தாண்டு செப்டம்பா் மாதம் போராட்டம் நடத்தினா். முன்னதாக 53 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா். அவற்றின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீட் தோ்வு தொடா்பாக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் தாக்கல் செய்தும் எந்த பலனும் இல்லை. தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உயா்கல்வி பெற முடியாமல் தடுக்க நீட் தோ்வை கொண்டு வந்துள்ளனா். இதனை தமிழகம் நிராகரிக்கிறது. அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வில் வெற்றிபெறும் அரசு மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநா் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அவா் மத்திய பாஜக அரசின் முகவராக உள்ளாா்.

வேலூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்கம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவா் வெறும் கருவிதான். அவரை இயக்கிய நபா் வேறு எங்கோ உள்ளாா். ஆனால், அவரை பிடிக்க மாட்டாா்கள். சிபிஐ என்பது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலா் வீரபாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com