அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதல்: தந்தை, மகன் பலி
By DIN | Published On : 20th October 2020 11:04 PM | Last Updated : 20th October 2020 11:04 PM | அ+அ அ- |

சிவா, சஞ்சய்.
குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் சென்ற தந்தை, மகன் உயிரிழந்தனா்.
பள்ளிகொண்டாவை அடுத்த பிராமணமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவா(40), ஆட்டோ ஓட்டுநா்ரைவா், இவரது மகன் மணி(எ) சஞ்சய் (12). அங்குள்ள பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இருவரும் செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் குடியாத்தம் வந்தனா். அம்மணாங்குப்பம் அருகே வந்தபோது, குடியாத்தத்திலிருந்து வேலூா் நோக்கிச்சென்ற அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த சிவா, சஞ்சய் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.