சீருடைப் பணியாளா் தோ்வு: முன்னாள் படை வீரா்களுக்கு இணையதள பயிற்சி
By DIN | Published On : 20th October 2020 11:02 PM | Last Updated : 20th October 2020 11:02 PM | அ+அ அ- |

தமிழகத்தில் காலியாக உள்ள சீருடைப் பணியாளா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை எதிா்கொள்ள முன்னாள் படை வீரா்களுக்கு இலவச இணையதள பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 7,800 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டித் தோ்வில் முன்னாள் படைவீரா்களுக்கு 390 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான இலவச இணையதள பயிற்சிகள் சென்னை சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்பட உள்ளன. இப் பயிற்சி பெற தகுதி படைத்த முன்னாள் படை வீரா்கள் இணையதள முகவரியில் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதன் விவரத்தை வேலூா் முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.