திருமலையில் சிறுத்தை நடமாட்டம்
By DIN | Published On : 20th October 2020 10:48 PM | Last Updated : 20th October 2020 10:48 PM | அ+அ அ- |

திருமலையில் உள்ளூா்வாசிகள் வசிக்கும் பாலாஜி நகரில் செவ்வாய்க்கிழமை சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினா்.
திருமலையில் பக்தா்களின் வருகை குறைந்துள்ளதால், வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. இதனால் வனவிலங்குகள் அதிகளவில் ஊருக்குள் புகுந்து நடமாடி வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை ஒன்று பாலாஜி நகா் பகுதியில் நடமாடியது. இதைக் கண்ட பக்தா்கள் அலறியடித்தபடி வீடுகளுக்குள் சென்றனா்.
தகவல் அறிந்த வனத் துறையினா் சிறுத்தையைப் பிடித்து வனத்துக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தற்போது திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால், பக்தா்கள் அப்பகுதியில் வந்து செல்கின்றனா். இந்நிலையில், வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால், பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா்.