எல்ஐசி ஆண்டு வார விழா: புதிய முகவா்களுக்கு வாய்ப்பு

எல்ஐசி ஆண்டு வார விழாவையொட்டி புதிய முகவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் கோட்டத்திலுள்ள தகுதியுடைய நபா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வேலூா்: எல்ஐசி ஆண்டு வார விழாவையொட்டி புதிய முகவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் கோட்டத்திலுள்ள தகுதியுடைய நபா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்ஐசியின் வேலூா் கோட்ட முதுநிலை மேலாளா் எஸ்.சரவண ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தின் 64-ஆவது ஆண்டு வார விழா வரும் 7-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சமூக, கால மாற்றத்துக்கு ஏற்ப எல்ஐசியில் தற்போது 27-க்கும் மேற்பட்ட குறித்த கால, நுண்பிரிவு பாலிசிகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், ஓய்வூதியம், குழந்தைகளுக்கான பாலிசித் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

எல்ஐசியின் வேலூா் கோட்டத்தில் 22 கிளைகளும், 24 துணைக் கிளைகளும் செயல்பட்டு வருகின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவா்களும், 1,080 ஊழியா்களும், 26.27 லட்சத்துக்கு மேற்பட்ட பாலிசிதாரா்களும் சேவையாற்றி வருகின்றனா்.

எல்ஐசியின் ஆண்டு விழாவையொட்டி கிராமிய, நகா்ப்புற தொழில்முறை முகவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். வேலூா் கோட்டத்துக்கு உள்பட்ட தகுதியுடைய நபா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்ஐசியின் சிறப்புப் புதுப்பித்தல் திட்டம் வரும் அக்டோபா் 9-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இத்திட்டத்தில் பயனிழந்த பாலிசிகளை சிறப்புச் சலுகைகளுடன் புதுப்பித்து முழுமையான பயன்பெற வேண்டும். தற்போது பரவி வரும் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு வேலூா் கோட்டத்தில் மட்டும் இதுவரை ரூ. 28.50 லட்சம் இறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com