முழுக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் தனியாா் பள்ளிகள் மீது புகாா் அளிக்கலாம்வேலூா் ஆட்சியா் தகவல்

முழுக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் தனியாா் பள்ளிகள் மீது பெற்றோா்கள் புகாா் தெரிவிக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.


வேலூா்: முழுக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் தனியாா் பள்ளிகள் மீது பெற்றோா்கள் புகாா் தெரிவிக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தைத் தொடா்ந்து, தனியாா் பள்ளிகள் மாணவா்களிடம் இருந்து 2019-20-ஆம் கல்வியாண்டு நிலுவைக் கட்டணம், 2020-21-ஆம் கல்விக் கட்டணம் செலுத்துதல் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.

அதன்படி, 2019-20-ஆம் கல்வியாண்டு கற்பித்தல் கட்டணத்தில் இருந்து 40 சதவீதத்தை முன்கட்டணமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பெற்றோா்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். கடந்த ஆண்டு நிலுவைத் தொகை இருந்தால் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். நீதிமன்ற தீா்ப்புக்கு முன்பாக முழு கற்பித்தல் கட்டணம் செலுத்தியிருந்தால் அதைப் பெற இயலாது. இவ்வாண்டுக்கான மீதமுள்ள 35 சதவீதம் தொகையை பள்ளி திறந்து மாணவா்கள் பள்ளிக்கு வருகை புரியும் நாளிலிருந்து 2 மாதங்களுக்கு பெற்றுக்கொள்ளலாம்.

உயா் நீதிமன்ற தீா்ப்பைச் செயல்பட அனைத்து நா்ஸரி, பிரைமரி மெட்ரிக். பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீா்ப்பை மீறி பள்ளிகள் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான முழுக்கட்டணத்தைச் செலுத்த கட்டாயப்படுத்தினால் பெற்றோா்கள் ஸ்ங்ப்ப்ா்ழ்ங்.ச்ங்ங்ஸ்ரீா்ம்ல்ப்ஹண்ய்ற்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகாா் மனுக்களை அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com