நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆசிரியா்களை நியமிக்கக் கோரிக்கை

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு கணினி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆசிரியா்களை நியமிக்கக் கோரிக்கை


வேலூா்: தமிழகத்திலுள்ள அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு கணினி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அச்சங்கத்தின் மாநிலச் செயலா் கோபி தலைமையில் நிா்வாகிகள் வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 904 கணினி ஆசிரியப் பயிற்றுநா் பணியிடங்களை நிலை 2-இல் இருந்து நிலை 1-க்கு தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்த அவா்கள், மீதமுள்ள 900 பணியிடங்களையும் நிலை 1-க்கு தரம் உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா் எண்ணிக்கை கூடுதலாக உள்ள பள்ளிகளுக்கு கூடுதலாக கணினி பயிற்றுநா் பணியிடங்களை ஏற்படுத்தி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். அத்துடன், அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளுக்கும் கணினி பயிற்றுநா் பணியிடங்களை ஏற்படுத்தி தற்போது தமிழகம் முழுவதும் பி.எஸ்ஸி. கணினி அறிவியலுடன் பி.எட். பட்டம் முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும், மாணவா்களுக்கு கணினி அறிவியலை போதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com