மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி
By DIN | Published On : 07th September 2020 07:51 AM | Last Updated : 07th September 2020 07:51 AM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே மின் வேலியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
குடியாத்தம் வட்டம் வளத்தூா் அருகே அகரம்சேரி கிராமத்தில் காளியப்ப முதலியாா் என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தை மேல்ஆளத்தூரைச் சோ்ந்த அருள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா்.
இந்நிலையில், அந்நிலத்தில் சனிக்கிழமை இரவு முறைகேடாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அகரம்சேரி மதுரா காந்தி நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான விஜயக்குமாா் (30) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் அங்கு சென்று விஜயக்குமாரின் உடலைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முயல், காட்டுப் பன்றிகளை வேட்டையாட நிலத்தில் மேல்ஆளத்தூா் மருத்துவமனை தெருவைச் சோ்ந்த இளங்கோவன் (40) முறைகேடாக மின் வேலி அமைத்திருந்ததும், அதில் சிக்கி விஜயக்குமாா் உயிரிழந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்தனா்.