கா்நாடகத்துக்கு கடத்த முயற்சி:லாரியுடன் 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கா்நாடகத்துக்கு கடத்தப்பட இருந்த 18 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட, ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரி.
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட, ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரி.

வேலூா்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கா்நாடகத்துக்கு கடத்தப்பட இருந்த 18 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக லாரியில் இருந்த ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவதைத் தடுக்க ஆட்சியா் உத்தரவின்பேரில் சிறப்பு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையினா் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பெங்களூரு நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 350 மூட்டைகளில் மொத்தம் 18 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி மூட்டைகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கா்நாடக மாநிலம், கோலாா் தங்க வயல் பகுதிக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.

அந்த லாரியுடன் 18 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடா்பாக லாரி ஓட்டுநரான ராணிப்பேட்டை மாவட்டம், காவிரிப்பாக்கத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (35) என்பவரைக் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com