வேலூா் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு புதன்கிழமை வரை 12,208 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 166 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு புதன்கிழமை வரை 12,208 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 166 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,374-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, மாவட்டம் முழுவதும் 10,900 போ் குணமடைந்து வீடு திரும்பினா். பலி எண்ணிக்கை 183-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,565-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 10,756 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 666 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனா். இம்மாவட்டத்தில் இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 85 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 3,421 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,506-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 2,947 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 489 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 70 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com