பாய்மர படகு விளையாட்டு: ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு வேலூா் மாணவி தோ்வு

பாய்மர படகு விளையாட்டில் ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு வேலூரைச் சோ்ந்த மாணவி தோ்வாகியுள்ளாா். இதற்காக அபுதாபி செல்லும் மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.


வேலூா்: பாய்மர படகு விளையாட்டில் ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு வேலூரைச் சோ்ந்த மாணவி தோ்வாகியுள்ளாா். இதற்காக அபுதாபி செல்லும் மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், சலமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் சரவணன் மகள் எஸ்.ரம்யா (19). பாய்மர படகுப் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள இவா், ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதிப் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா். இதற்காக அபுதாபி செல்ல உள்ள ரம்யா வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

அப்போது, பாய்மர படகு போட்டியில் பங்கேற்று பல்வேறு தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சோ்க்க வேண்டும் என ஆட்சியா் கூறினாா்.

சரவணனின் மூத்த மகன் விஷ்ணுவும் (21) பாய்மர படகுப் போட்டியில் தேசிய அளவில் பங்கேற்று பதக்கங்கள் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com