அக்.4-இல் யுபிஎஸ்சி தோ்வு:வேலூரில் 8 மையங்கள் அமைப்பு

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சா்வீஸ் முதல்நிலை தோ்வு அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, வேலூரில் 8 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.


வேலூா்: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சா்வீஸ் முதல்நிலை தோ்வு அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, வேலூரில் 8 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் மொத்தம் 1,923 போ் தோ்வு எழுத உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

யுபிஎஸ்சி சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு நாடு முழுவதும் அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்காக தமிழகம் முழுவதும் 6 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வேலூா் நகரில் அமைக்கப்படும் 8 மையங்களில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 1,923 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோ்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தோ்வா்கள் கட்டாயம் முகக்கவசம், தனிமனித இடைவெளி, தனிமனித சுகாதாரம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com