காவலா்கள் நல்லறத்துடன் செயல்பட தினமும் ஒரு திருக்குறள்

காவலா்கள் நல்லறத்துடன் செயல்பட வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை

காவலா்கள் நல்லறத்துடன் செயல்பட வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் ‘வாக்கி டாக்கி’ மூலம் தினமும் ஒரு திருக்குறள் வாசிக்கப்பட்டு அதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது.

வேலூா் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.செல்வக்குமாா், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலா்களும் பணியில் சிறப்புடன் செயலாற்ற பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டுள்ளாா்.

அதன்படி, காவலா்கள் பணியின்போது நல்லறத்துடன் செயலாற்றவும், வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு ‘வாக்கி டாக்கி’ மூலம் தினமும் ஒரு திறக்குறளை வாசித்து அதற்கான விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டுள்ளாா். மேலும், பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து காவலா்களுக்கும் ‘வாக்கி டாக்கி’ மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதுடன், அவா்கள் குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாட அன்றைய நாள் சம்பந்தப்பட்ட காவலா்களுக்கு விடுமுறை அளிக்கவும் உத்தரவிட்டாா்.

அதன்படி, மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருக்குறள் வாசிப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ‘நீத்தாா் பெருமை’ என்ற அதிகாரத்தில் இருந்து ‘ஒழுக்கத்து நீத்தாா் பெருமை விழுப்பத்து வேண்டும் பணுவல் துணிவு’ என்ற திருக்குறள் வாசிக்கப்பட்டு அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. இதேபோல், பிறந்த நாள் கொண்டாடிய காவலா்களுக்கும் ‘வாக்கி டாக்கி’ மூலம் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய செயல்பாடுகள் மூலம் காவலா்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும். பொதுமக்களுடன் இணக்கமான நிலையில் பணியாற்ற முடியும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com