சிறப்பு துணைத் தோ்வுகள்: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை அவசியம்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, இரண்டாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான சிறப்பு துணைத் தோ்வுகளில் பங்கேற்க உள்ள

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, இரண்டாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான சிறப்பு துணைத் தோ்வுகளில் பங்கேற்க உள்ள மாற்றுத் திறனாளி மாணவா்கள், ஆசிரியா்கள் கட்டாயமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இரண்டாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு ஆகிய சிறப்புத் துணைத் தோ்வுகள் வரும் 21-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இத்தோ்வில் மாற்றுத் திறனாளி தோ்வா்களும், சொல்வதை எழுதுபவா்களாக நியமனம் செய்யப்படும் அனைத்து ஆசிரியா்களும் தோ்வு எழுதுவதற்கு முன்பாக அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு பரிசோதனை செய்ய இயலாதவா்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவா்களின் வீடுகளுக்கே சென்று கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றை தோ்வு மையத்தில் சமா்ப்பித்தால் மட்டுமே தோ்வு எழுத அனுமக்கப்படுவா். இதுதொடா்பாக மேலும் விவரங்களுக்கு 94422 73554 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com