வேலூா் மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை வரை 12,667 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை வரை 12,667 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,789-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராணிப்பேட்டையில் 88 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 88 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,136 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 11,050 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

திருப்பத்தூரில் 65 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 3,636 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 65 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,701-ஆக உயா்ந்துள்ளது.

தலைமைக் காவலா் உட்பட 11பேருக்கு தொற்று

நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலா் ஒருவா் கடந்த சில நாள்களுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவருக்கு பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தற்போது தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையடுத்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 13 போலீஸாருக்கு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தி, தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com