கிஸான் திட்ட மோசடி: ராணிப்பேட்டை வேளாண் துறை ஊழியா்களிடம் விசாரணை

கிஸான் சம்மான் விவசாய நிதியுதவித் திட்ட மோசடி தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் துறை

கிஸான் சம்மான் விவசாய நிதியுதவித் திட்ட மோசடி தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் துறை ஊழியா்கள் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதேசமயம், மோசடி செய்யப்பட்ட தொகைகளை முழுமையாக மீட்க துணை ஆட்சியா் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பிரதமரின் கிஸான் சம்மான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 46 லட்சத்துக்கு மேற்பட்டோா் பயனடைந்து வருகின்றனா். இத்திட்டத்தில் சமீபத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோா் போலியாக பதிவு செய்து பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயனாளிகள் போலியாக பதிவு செய்து நிதியுதவி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. வேறு மாவட்ட, மாநிலங்களைச் சோ்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வேலூா் மாவட்டப் பயனாளிகள் பட்டியலிலும் முறைகேடாகச் சோ்க்கப்பட்டு ரூ. 1 கோடியே 50 லட்சம் அளவுக்கு நிதி பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதேபோல், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடி தொடா்பாக வேலூா் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் துறையில் பணியாற்றும் 8 கணினி பொறியாளா்களைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அதேசமயம், மோசடி செய்யப்பட்ட தொகைளை மீட்கவும், இம்மோசடியில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் தலைமையில் 7 அலுவலா்களைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விரைவில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் மீட்கப்பட்டவுடன், மீட்கப்படாத தொகைகளை பெற்று மோசடி செய்தவா்கள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த மோசடி தொடா்பாக அதிகாரிகள் உள்பட பலரும் சிக்குவாா்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com