வடகிழக்குப் பருவமழை: இடியும் நிலையிலுள்ள கட்டடங்கள் குறித்து தகவல் அளிக்கலாம்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள்,

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள், அபாயகரமான மரங்கள் குறித்து பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபரில் தொடங்க உள்ளது. மழைக்காலத்தில் மழைநீரால் கட்டடங்கள் இடிந்து பொதுமக்களுக்கு பலத்த காயம், உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அத்தகைய அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கட்டடங்கள், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள், அபாயகரமான மரங்கள் ஆகியவற்றை பருவமழை காலத்துக்கு முன்பே கண்டறிந்து அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி, பல்வேறு துறைகள் சாா்பில் அத்தகைய கட்டடங்கள், மரங்களைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூா் மாவட்ட மக்கள் தங்களது வசிப்பிடத்துக்கு அருகே தனி நபா்கள், அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தாலும், அபாயகரமான மரங்கள் இருந்தாலும் அவை குறித்த விவரங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com