அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள் தா்னா

வேலூா் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மைப் பெண் தொழிலாளி ஒருவா் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா்: வேலூா் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மைப் பெண் தொழிலாளி ஒருவா் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவா் கரோனா தொற்றால் தான் உயிரிழந்ததாகவும், எனவே அனைத்து தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மற்ற தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். இந்நிலையில், அங்கு தூய்மைப் பணியாளராக பணியாற்றிய வேலூா் அருகே மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பெண் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அவா் கரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும், எனவே அனைத்து தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மருத்துவமனையில் பணியாற்றும் மற்ற தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ், மருத்துவமனை முதல்வா் ஆா்.செல்வி, வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து தூய்மைப்ப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com