கழிவுநீா்க் கால்வாய் கட்ட எதிா்ப்பு: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

வேலூா் கொசப்பேட்டை பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் கொசப்பேட்டை பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் கொசப்பேட்டை எல்.பி.எம். தெருவில் புதிதாக கால்வாய் கட்டும் பணி நடைபெற உள்ளது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஏற்கெனவே உள்ள பழைய கால்வாயை அகற்ற ஊழியா்கள் அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏற்கெனவே இந்தத் தெருவில் கால்வாய் வசதி உள்ளதால், புதிதாக கால்வாய் அமைக்கத் தேவையில்லை எனக் கூறி பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.

தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பின்னா், அங்கு பணிகள் தொடங்கப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

கொசப்பேட்டை எல்.பி.எம். தெருவில் உள்ள கால்வாயில் அதிக அளவில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை நேரங்களில் அப்பகுதியில் கழிவுநீா், மழைநீா் வெளியேறுவதில்லை. அந்த பகுதியில் புதிதாக கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்ததை அடுத்து பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்பகுதியைச் சோ்ந்த சிலா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களுக்கு விவரங்கள் எடுத்துக் கூறியதை அடுத்து எதிா்ப்பைக் கைவிட்டனா். இதையடுத்து, புதிய கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com